Sale

BIXO – DENT

22.0085.00

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Additional information

BIXO-DENT KK

12gm, 50gm

 

BIXO – DENT
மூலிகை பல்பொடிகள்

நாங்கள் இயற்கையான மூலிகைகைக் கொண்டு பாரம்பரிய முறையில் மூலிகை பல்பொடிகளைத் தயாரிக்கிறோம்.
BIXO-DENT KK என்பது காசுக்கட்டி என்ற மூலிகையை அடிப்படையாகக் கொண்டது.

இதில் கலந்துள்ள பொருள்கள்

  • வேலம்பட்டை
  • ஆல விழுது
  • களிப்பாக்கு
  • காசுக்கட்டி
  • ஏலக்காய்
  • கடுக்காய்
  • இந்துப்பு
  • கிராம்பு
  • மிளகு
  • தவிடு
  • சுக்கு
  • வேலம்பட்டை பல்லில் உள்ள கிருமிகளை நீக்கும்
  • ஆல விழுது பல்லுக்கு பலம் தரும். பல் ஈறுகளை வலுவாக்கி வயதாகும் பொது விரைவில் பல் விழுவதை தடுக்கும்.
  • களிப்பாக்கு வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை போன்றவற்றை நீக்கும்.
  • ஏலக்காய் வாய் துர்வாடையை போக்கும் மற்றும் புத்துணர்ச்சி தரும்.

காசுக்கட்டி பற்றி தனியாகப் பார்ப்போம்.

  • கடுக்காய் காசுக்கட்டியோடு சேர்ந்து உமிழ்நீர் சுரப்பை தூண்டிவிடும். அதனால் ஜீரண சக்தி கூடும்.
  • இந்துப்பு ஒரு கிருமிநாசினி.
  • கிராம்பு பல் துளைகள் மூலம் வரும் பல் வலி மற்றும் பல் கூச்சத்தை நீக்கும்.
  • தவிட்டில் உள்ள சிறு சிறு சிலும்பல்கள் பல் இடுக்கில் உள்ள அழுக்கு மற்றும் கறைகளை நீக்கும்.
  • சுக்கு கிருமி நாசினியாகவும் ஜீரண சுரப்பை தூண்டும் காரணியாகவும் செயல்படும்,

காசுக்கட்டி – செங்கருங்காலி மரப்பட்டையைக் காய்ச்சிப் பெறப்படும் பெயர்தான் காய்ச்சுக்கட்டி. இது மருவிக் காசுக்கட்டி ஆகிவிட்டது. அதை கருங்குண்டுக்கட்டி என்றும் கூறுவார்கள். மேலும் சந்தனம், கற்பூரம், காசுக்கட்டி, தோடு நீக்கப்பட்ட ஏலக்காய் வித்து மற்றும் மலைத் தேன் ஆகிய ஐந்தின் கூட்டை அதாவது இந்த 5 மூலிகைகளையும் சேர்த்து செய்யப்படும் ஒரு மூலிகைப் பொருளை அகிற் கூட்டு என்று சொல்வார்கள். இது வாயில் உள்ள கிருமிகளை நீக்குவது மட்டும் இல்லாமல் இந்த பல் பொடியில் உள்ள கடுக்காய், சுக்கு மற்றும் மிளகுடன் சேர்ந்து ஜீரண சுரப்புகைளை தூண்டி உமிழ்நீர் சுரப்பை அதிகமாக்கும்.

நவீன உலகில் வேகமாக உண்ணும் பழக்கத்தால் வாயில் உமிழ்நீருடன் நடக்க வேண்டிய அடிப்படை ஜீரணம் குறைவதால் ஜீரண கோளாறுகள் உருவாகிறது. அதே நேரம் குறைந்த நேரத்தில் அதிக உமிழ்நீர் சுரந்தால் இந்த ஜீரண பிரச்னை ஓரளவு சரிசெய்யப்படும். அதற்கு இந்த அகிற் கூட்டு மூலிகை பயன்படும். இதை வைத்து பல் தேய்க்கும் பொதே அது உமிழ் நீர் சுரப்பு தூண்டிவிடும். அதனால் சாதாரண நேரங்களிலும் உமிழ்நீர் சற்று அதிகமாக சுரந்து உணவு செரிமானத்தைக் கூட்டும்.

ஒரு காலத்தில் வெற்றிலையோடு ஒருபுறம் சுண்ணாம்பையும் மறுபுறம் இந்த காசுக்கட்டியையும் தடவித் தான் தாம்பூலம் சுவைத்தார்கள். ஆங்கிலேயர்களால் புகையிலை அறிமுகம் செய்யப்பட்டப் பின்பு அதில் இருந்து காசுக்கட்டியின் இடத்தை புகையிலை பிடித்துக்கொண்டது. புகையிலை நேர் எதிமாறான விளைவாக பல் கரை படிதல் முதல் வாய் துறுநாற்றம் வரை அனைத்து கேடுகளையும் உருவாக்கியது. காசுக்கட்டி இருந்த வரை 60 வயதில் கல்லைக் கூட கடித்து உடைக்கும் வலு போய் 20 வயதில் கடலை மிட்டாயைக் கடிக்கக் கூட முடியாத பல் சிதைவில் கொண்டு நிறுத்தியுள்ளது.

இந்த பல்பொடியை பாதி வேர்க்கடலை அளவு எடுத்து அதனுடன் சப்பாத்தி மாவை சேர்த்து சுண்டைக்காய் அளவில் உருண்டை பிடித்து அதை பல் துளை மீது வைத்து அடைத்து விட்டு எச்சில் ஊறி கரையக் கரைய துப்பிக்கொகொண்டே இருந்தால் துளைக்குள் இருக்கும் பூச்சி வெளிய வந்து உமிழ்நீரோடு வெளியெறிவிடும். இதேப் போன்று கூச்சம் உள்ள பல்லில் தொடர்ந்து ஒரு வாரம் தினமும் மூன்று நான்கு முறை செய்தல் பல் கூச்சம் நிரந்தரமாக நின்றுவிடும்.

BIXO – DENT KK
The herbal tooth powder

—————————————

We are manufacturing tooth powder using our natural and traditional ingredients. Our BIXO-DENT KK herbal tooth powder is based on a traditional Perishable herbal CATECHU
Other ingredients added

  • Dried Ginger
  • Banyan Root
  • Auction Bar
  • Rice Bran
  • Areca Nut
  • Cardamom
  • Haritaki
  • Rocksalt
  • Catechu
  • Pepper
  • Clove

Bark of Acacia genus / Auction bar – It will remove the gems of tooth gaps

  • Banyan Root – It gives strength to teeth and gums. Prolong the age of teeth.
  • Areca Nut – It heals the woods of mouth and stomach faster and regulate the bad breath
  • Cardamom – It regulate the bad breath and refresh the breath.
  • Haritaki – It stimulate saliva along with Catechu and solve mal-digestion due to low secretion of saliva.
  • Rock Salt – it is good disinfectant.
  • Clove – It controls the toothache and tooth sensitivity.
  • Rice Bran – The uneven rough and mild shaggy surface of rice bran can remove the deposits on the teeth
  • Dried Ginger – It used as disinfectant and stimulator of digestive enzymes.

And finally, the prime ingredient
CATECHU – It is an extract of acacia trees used variously as a food additive, astringent, tannin, and dye. It is extracted from several species of Acacia, but especially Senegalia catechu (Acacia catechu), by boiling the wood in water and evaporating the resulting brew. Catechu is most commonly used by mouth for stomach problems such as diarrhea, swelling of the colon (colitis), and indigestion. It is also used orally for pain from osteoarthritis and topically to treat pain, bleeding, and swelling (inflammation).

Just two to three generations back our forefathers were spent enough to for eating. The grind the food at mouth for few minutes before swallow. During such time the secreted saliva will the first step of digestion happened properly. In our modern and fast life, the basic digestion to be happened naturally in our mouth was missing. By increasing the saliva secretion, it can be compensated to a few extend. The combo of Catechu with Haritaki and Rock Salt will stimulate make the practice of more secretion of saliva for better digestion. It leads to solve the complications based on lot of mal digestion problems.

The Catechu was used along with betel leaf, lime and areca nuts. Catechu was replaced by tobacco slowly during the invasion of British in India.
Just half gram will be enough for brushing one time. We can use normal tooth brush or fresh neem stick crushed at the edge like brush by dipping the wed brush with our tooth powder.

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.