-10%

Kof Soup Powder

9.0340.0

Quantity

Guarantee Safe Checkout

SKU: N/A Category:

Additional information

Kof Soup Powder

5 gm, 50 gm, 250 gm

TAMIL

KOF மூலிகை சூப் பொடி
KOF SOUP POWDER

இது சுவாச மண்டலத்தின் செயல்பாட்டையும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்கும் மூலிகைகள் சரி விகிதத்தில் கலந்த ஒரு சூப் பொடி.

சுவாச மண்டல கோளாறு சில உள்புற காரணிகளால் இருந்தாலும் பெரும்பாலும் வெளி புறக் காரணிகளால் ஏற்படுவது. தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 (கொரோனா) என்ற சுவாச மண்டலத்தை தாக்கும் கிருமியும் இதே ரகம்தான். நமது சூப் பொடியில் உள்ள மூலிகைகள் சுவாச மண்டலத்தின் செயல்பாடுகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் சுவாசக் காற்றின் வெளியில் இருந்து வரும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியையும் நம் உடலுக்குத் தருகிறது.

இது சுவாசக் குழாய்களில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் சுவாசத்தையும் எளிதாக்கும்.

சளி இருமல் போன்ற பிரச்சனைகள், நம் உடலில் உள்ள கிருமி தொற்றை நீக்குவதற்காக உடல் செய்யும் தற்காப்பு முயற்சி. வெளியில் இருந்து வரும் கிருமிகளை நமது உடலிலிருந்து சுரக்கும் கோழை போன்ற ஒரு திரவம் சுற்றி வளைத்து சளி உருவில் மாற்றி அவை சுவாச மண்டலத்தின் சுவர் செல்களை தாக்காமல் மற்றும் இரத்தத்தில் கலக்காமல் அல்லது உடலுக்குள் ஊடுருவாமல் பாதுகாக்கிறது. அது போன்று சுற்றி வளைக்கப்பட்ட கோழைகளான சளியை வெளியேற்றுவதற்கு உடல் முயற்சி செய்யும். இயற்கை மூலிகைகள் அந்த சளியை விரைவாக வெளியேற்றுவதற்கும், அதிக சுரப்புகள் மூலம் அதிகமான சளியை உற்பத்தி செய்து மொத்த கிருமிகளையும் வெளியே அனுப்புவதற்கு முயற்சி செய்யும். அதனால் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தும் போது இருமலும் சளியும் அதிகமாகி அதன் பின்பு தான் சரியாகும்.

இப்போது உள்ள நவீன உலகத்தின் நெருக்கடி காரணமாக சளி, இருமல் தாக்கும்போது சளியோ அல்லது மூக்கில் நீர் வடிவது இல்லாமல் இருப்பதற்கு உடனடி நிவாரணியாக சில ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறோம். அதுதான் பிற்காலத்தில் அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உருவாகிறது. அது மூச்சிரைப்பு ஆரம்பித்து டிபி வரைக்கும் கொண்டு செல்கிறது.

அதுபோன்று சளி வெளியேறுவதை தடுத்து இருமல் மூக்கு ஒழுகுதல் போன்றவற்றிற்கு நிவாரணம் நாம் தேடும் பட்சத்தில் நம் சுவாசம் மண்டலத்திற்குள் நுழைந்த கிருமிகள் நம் உடல் சுரந்த சளியில் உறைந்து சிஸ்ட் என்ற நிலையில் இருக்கும். அது அதற்கு உகந்த சில சூழலில் உள்ளேயே பன்மடங்காக பெருகி திடீரென்று கடுமையான தாக்கத்தை உருவாக்கும். அது போன்ற காலகட்டங்களில் அளவுக்கு அதிகமான கிருமியால் திடீரென்று தாக்கப்படும் உடல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு புதிய அவகாசம் இல்லாமல் நோய் தீவிர நிலையை அடைய வாய்ப்பு உண்டு.

சனிக்கும், சளிக்கும் ஏழரை தான் கணக்கு என்ற ஒரு பேச்சு வழக்கு ஒன்று உண்டு. அதாவது ஜோதிடத்தில் சனி திசையில் ஏழரை நாட்டு சனி என்பது பெரிய அளவில் பேசப்படுவது. அதேபோல் சளித் தொந்தரவு பொதுவாக ஏழரை நாள் வரை குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் என்பது தான் அதற்கான பொருள். இருப்பினும் ஒரு சிலருக்கு உடல் நிலையும் தாக்கத்தின் அளவைப் பொருத்தும் அந்த கால நிலை மாறுபடும்.

இந்த சூப் பொடி 14 மூலிகைகள் அடங்கியது. அதில் சில மூலிகைகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

  • பனங்கற்கண்டு
  • வால் மிளகு
  • தூதுவளை
  • திப்பிலி
  • மஞ்சள்
  • மிளகு
  • துளசி
  • சுக்கு

மற்றும் பல

ஒருவருக்கு ஒரு நேரத்திற்குத் தேவையான நமது ஜீரண மூலிகை பொடி 5 கிராம். இந்த 5 கிராம் பொடியை 200 மிலி நீரில் நன்றாகக் கரைத்து முக்கால் பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து ஓரளவு சூடாக குடிக்க வேண்டும். இதில் இந்துப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் தனியாக உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனுடன் ஈரப்பதத்துடன், காயாமல், கெட்டுப்போகாமல் இருக்கும் தேர்ந்தெடுத்த ஓரிரு இளம் வெற்றிலை அல்லது கண்டங்கத்திரி இலை இரண்டில் ஏதோ ஒன்றுடன் இரண்டு மூன்று கறிவேப்பிலை சேர்த்தும் காய்ச்சலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை. இந்த சேர்மானம் அந்த சூப்பின் வீரியத்தை கூட்ட வல்லது.

இது சளி இருமல் மற்றும் மூச்சிரைப்பு இருப்பவர்களுக்கு மருந்தாகவும் மற்றவர்களுக்கு சுவாச மண்டலத்தை வலுசேர்க்கும் மூலிகையாகவும் பயன்படும். இந்த சூப்பை வாரம் ஒருமுறை குடிப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு வரும் சுவாச மண்டல கோளாறுகளை விடக் கண்டிப்பாக குறைவாகத் தான் இருக்கும். அது அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். கோவிட் 19 கிருமி தாக்குதலுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்காக குடிக்கும் மற்ற கசாயங்களோடு இதை ஒரு சூப்பாக கூட சாப்பாட்டுக்கு முன் பயன்படுத்தலாம்.

சளி இருமல் இருப்பவர்கள் இந்த சூப்பை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்%E

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kof Soup Powder”

Your email address will not be published. Required fields are marked *