-7%

Millet Soup Powder

7.5240.0

Quantity

Guarantee Safe Checkout

SKU: N/A Category:

Additional information

Millet Soup Powder

5 gm, 50 gm, 250 gm

TAMIL

MLT மூலிகை சூப் பொடி
MLT SOUP POWDER

சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.

பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சூழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.

சிறுதானியங்களை சுத்தம் செய்து அதை பாரம்பரிய முறைப்படி பக்குவம் செய்து சரியான அளவில் வறுத்து குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து அதை போடி செய்து தயாரிக்கப்படுவது தான் இந்த சூப் பொடியின் அடிப்படை மூலப்பொருள் அத்துடன் சுக்கு மிளகு ஜீரகம் போன்றவற்றை கலந்தது தயாரித்தது தான் இந்த சூப் பொடி. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை கீழே கொடுத்துள்ளேன்.

வரகு
வரகு அரிசியின் பூர்வீகம் ஆப்பிரிக்க என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் காலத்திற்கு முன்பே கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதன் பூர்வீகம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

கேழ்வரகு (அ) கேப்பை
இது இந்தியாவில் 4000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தானியம். கேழ்வரகில் உள்ள Lecithin மற்றும் Methionine போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கேழ்வரகில் கல்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. பாலில் உள்ள கல்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு, ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும், இது அற்புதமான மருந்தாகும். கேழ்வரகு, செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் சாப்பிட்டு வந்தால், பால் சுரபை அதிகரிக்க உதவும்.

சாமை
சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். கி.மு 2600 முன்பு, சிந்து சமவெளி நாகரிகத்தின் Harappa மற்றும் Famaana வில் சாமை பயிரடப்பட்டுள்ளது என்று வரலாற்று அய்வு கூறுகிறது. நார்சத்து, உள்ள காரணத்தினால், மலச்சிக்கலை போக்க வல்லது. மேலும், நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர நார்சத்து அவசியம். நெல்யைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.

தினை
தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் செய்தி, குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டுள்ளது. தினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. காய்சசல், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுப்பது சிறந்த உணவாக இருக்கும். தினை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட தானியமாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

குதிரைவாலி
நம் மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா மற்றும் ஜப்பான்ல் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பயிரப்பட்டுள்ளது. நெல் விளையாத நிலங்களில் குதிரைவாலி பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேகவைத்தும் கஞ்சியாவும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் பண்டைய தமிழர்களிடம் உள்ளது. தமிழர்களின் உணவில் குதிரைவாலி முக்கிய பங்கு வகிக்கிறது. குதிரைவாலி ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. இதன் சுண்ணாம்புச்சத்து உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலிமை அளிக்கின்றது, மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, ரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும், தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

கம்பு
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்பின் பூர்விகம் ஆப்பிரிக்கா வகை இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவிகிக்கிறார்கள். உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது. Oil Content வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் Polyunsaturated Fatty Acid உள்ளது. இது உடலுக்கு தேவையான கொழுப்பு ஆகும்.

பார்லி (அ) வாற்கோதுமை
பார்லி வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து பயிரிடப்படுகிறது; பார்லி ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிபதில் பயிரிடப் பட்டு வருவதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விலங்கு தீவனம் மற்றும் தானியங்களுக்காக வளர்க்கப்படுகிறது. பார்லி உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது. அதேபோல் செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. பார்லியில் தாவர லிக்னன்கள் எனப்படும் ஒரு வகையான பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளன. அவை குடலில் என்டோரோலாக்டோன் எனும் விலங்கு லிக்னன்களாக மாற்றப்படுகிறது. இது மார்பக மற்றும் பிற ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

சம்பா கோதுமை
இதன் தாயகம் 9000 ஆண்டுகளுக்கு முந்திய மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய என்று ஒரு கருது இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சுமேரிய நாகரீகத்தில் இருந்து தான் முறையான ஆதாரம் உள்ளது. ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை. சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறைகிறது.

200 மிலி நீரில் 5 கிராம் பொடியை கலந்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி. இந்த சூப் பொடி சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூப் செய்து குடிக்கலாம். முக்கியமாக நோயில் இருந்து மீண்டு வருபவர்கள் விரைவாக சக்தி பெற இதை குடிக்கலாம்.

இதற்கு எந்தவொரு பத்தியமோ அல்லது மற்ற நோய்க்காக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்து எதையும் மாற்றியமைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இது 5 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளாக கடைகளில் கிடைக்கும். அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு 250 கிராம் பாக்கெட்டுகளாக ஆர்டரின் பெயரில் பிரத்தியேகமான பேக்கிங் தரப்படும்.

இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம்.

P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633

For more details please visit
www.bixo.co.in

ENGLISH

MLT SOUP POWDER

Millet refers to small grains such as Kodo Millet / Proso Millet (Varagu), Little Millet (Saamai), Foxtail Millet (Thinai), Barbyard Millet (Kuthiravali), Pearl Millet (Kambu), Finger millet (Keppai) and Sprghum (Cholam)

Dietitians claim that Millets provide the body with essential nutrients in traditional diets. In addition, today’s cyclone, low rainfall, poor soil fertility, excessive fertilizer use, environmental damage caused by it, and rising agricultural input prices are leading to the view that millets are the food of the future.

This soup powder is made by mixing the basic ingredient of the soup powder as well as the cumin pepper .cumin, which is made by cleaning the grains and maturing them according to the traditional method and frying them in the right proportions and mixing them in a certain ratio. I have given below the importance of cereals.

Kodo / Proso Millet (Varagu)
Kodo / Proso Millet rice is said to be of African origin. But even before the time they say, Kapilar (3rd century BCE to 3rd century CE) the ancient poet of Tamil had mentioned in his song (115) that the ray had been produced. Its origin is not yet known for sure. There are up to 7 layers of skin. It cannot be eaten by birds, sheep or cows. Grows in all types of soils, including drought and toxins. Its seeds can germinate for up to a thousand years. Summers are more thirsty than other seasons. Eating a lot of foods made with Kodo / Proso Millet during these times will quench the thirst and prevent the formation of kidney stones and flush out all the toxins from the body in the urine. Improving the functions of the kidneys.

Finger millet (Keppai)
It is a grain that has been in use in India for 4000 years. Amino acids such as lecithin and methionine in Finger millet help to flush out excess fat in the liver and reduce cholesterol levels. Finger millet is rich in calcium and iron. It contains more calcium than milk. Therefore, it is advisable for diabetics to include more Finger millet in their diet. It is a wonderful medicine for people with anemia and low hemoglobin levels. Finger millet helps in digestion. If breastfeeding mothers eat this, it will help to increase milk secretion.

Little Millet (Saamai)
The most important component of cereals is Little Millet. Historical study states that tar was cultivated in Harappa and Famaana of the Indus Valley Civilization before 2600 BC. Fiber of Little Millet, for whatever reason, is said to relieve constipation. Also, it can get rid of constipation which is considered as a source of diseases. Fiber is essential for controlling diabetes. Little Millet is seven times more fibrous than rice.

Foxtail Millet (Thinai)
It is well known in Tamil literature that honey and Foxtail Millet flour were the staple food of the people of Kurinji land. Foxtail Millet is rich in vitamin nutrients. For those suffering from diseases like fever and cholera, giving Foxtail Millet porridge is the best food. Foxtail Millet is a grain rich in calcium. Foods made with this millet are often eaten to strengthen the bones. Frequent consumption of this millet helps in balancing the cholesterol level in the body. Dissolves unwanted fats and prevents weight gain and maintains good health.

Barbyard Millet (Kuthiravali)
Barbyard Millet has been used as food since the time of our ancestors. Cultivated in China and Japan 2000 years ago. Barbyard Millet is cultivated in non-paddy lands. The ancient Tamils ​​used to boil the rice and eat it with porridge and soak it in water. Barbyard Millet plays an important role in the diet of Tamils. Barbyard Millet works as an excellent antioxidant. Its calcium provides the necessary strength to the bones in the body, and the phosphorus and iron in it increase the hemoglobin in the blood and increase milk secretion in mothers.

Pearl Millet / Rye (Kambu)
Archaeological excavations in India have revealed that rye was brought to India over 2000 years ago. Archaeologists have suggested that the Pearl Millet may have originated in Africa. Rye accounts for 55% of the world’s total cereal production. Cereals are high in protein, which is 11.8 percent. Rye is high in beta carotene, a key factor in the production of vitamin A, which is essential for healthy skin and eyesight. Oil Content No other grain contains more than 5 percent oil. This oil contains 70% Polyunsaturated Fatty Acid. It is the essential fat for the body.

Barley
Barley has been cultivated since prehistoric times; Evidence suggests that barley was cultivated in Egypt as far back as 5,000 years ago. The animal is bred for fodder and grains. Barley increases nutrition in the body. Also this barley helps in controlling blood sugar and blood cholesterol. Also this barley rice porridge promotes the function of the kidneys. As well as protects against digestive disorders. Barley contains a type of phytonutrient called plant lignans. They are converted into animal lignans called endorolactone in the gut. It helps prevent the development of breast and other hormone related cancers.

Samba wheat
Although the homeland is thought to be 9000 years old in the Levant region of the Middle East and Ethiopia, the only formal evidence is from 5000 years ago Sumerian civilization. Apart from bread wheat and macaroni wheat, samba wheat is a type of wheat. For people with diabetes, sugar levels drop significantly when eating samba wheat. It also significantly reduces the amount of total fat and triglycerides.

Soup is ready if you mix 5 g of powder in 200 ml of water and boil it. This soup powder can be made and drunk by anyone from children to the elderly at any time. Mainly those recovering from the disease can drink this to gain strength quickly.

There is no need to change any passage for this or any Allopathy medicine that is being eaten for other ailments. It is available in stores in 5gram and 50gram packets. Those who need more than that will be given exclusive packing in the name of the order in 250gram packets.

This is a product of BIXO HERBAL COOKIES . We make many herbal based foods like this.

P. A. KUTTALA RAJAN
Tirunelveli
93457 66633

For more details, please visit
www.bixo.co.in

1 review for Millet Soup Powder

  1. lnkokhijq

    Millet Soup Powder – Bixo Herbal Cookies
    I like it

Add a review

Your email address will not be published. Required fields are marked *