*கருஞ்சீரகம் vs நீரழிவு நோய்*

கருஞ்சீரகத்தின் தாவரவியல் பெயர் *Nigella sativa*

கருஞ்சீரகம் நீரிழிவு நோய்க்கு எப்படி பயன்படுகிறது என்பதையும், அந்த கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் எப்படி ஆங்கில மருத்துவத்தில் மருந்தாக தரப்படுகிறது என்பது பற்றியும் மிக சுருக்கமாக இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்.

*THYMOQUINONE* (2-Isopropyl-5-methylbenzo-1, 4-quinone) molecular formula C10H12O2 தைமோக்குயினோன் (TQ) என்ற இந்த மருந்தை பற்றி முதலில் பார்ப்போம் அதற்குப் பிறகு இந்த மருந்துக்கும் கருஞ்சீரகம் என்ற மூலிகைக்கும் உள்ள தொடர்பை பின்னர் பார்க்கலாம்.

தைமோக்குயினோன் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இருதய நோய் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது. அதைத் தவிர நீரழிவு நோய்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது நாம் நீரழிவு நோய் பக்கம் நமது கவனத்தை செலுத்துவோம்.

நமது தவறான உணவு பழக்க வழக்கங்களால் வரும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் சிதைவை இந்த மருந்து குறைகிறது அல்லது ஏறத்தாழ கட்டுபடுத்தி விடுகிறது. இந்த மருந்து ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட். இது கொழுப்பின் அடிப்படையான லிப்பிட்களை லிபிட் பெராக்ஸிடேஷன் செய்கிறது. அதைத் தவிர இது குளுக்கோஸ் தானாக சிதைவதை அதாவது ஆட்டோ ஆக்சிடேஷன் எனும் மாற்றத்தை தடுக்கிறது. இறுதியாக குளுட்டத்யொன் மெட்டபாலிசம் glutathione metabolism என்ற செயல்பாடு மூலமாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அதன் அழிவிலிருந்து பாதுகாக்கிறது.

இதை சிறிது எளிமையாகவும் சிறிது கொச்சையாகவும் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு பீட்டா செல்கள் மீதும் ஒரு போர்வை போன்ற பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு நமது தவறான உணவு பழக்க வழக்கங்களால் சிதைவடைகிறது. அவ்வாறு சிதைவடையாமல் இருக்க அந்த பீட்டா செல்களின் பாதுகாப்பு படலத்தை இந்த மருந்து உறுதியாக்குகிறது. அதைத் தவிர அந்த பீட்டர் செல்களின் சுரக்கும் தன்மையை தூண்டிவிட்டு அதிகமாக சுரக்க வைக்கிறது.

துறை ரீதியாக வல்லுனராக இருக்கும் மற்றவர்கள் இதைப் பற்றி மேலும் தெளிவாகவும் இன்னும் ஆழ்ந்தும் (Technically) தெரிந்துகொள்ள விரும்பினால் ஒவ்வொரு நிலையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

https://www.sciencedirect.com/science/article/pii/S1995764517313792

இந்த மருந்து நீரழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும் என்று எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

இது நமது பாரம்பரியமான உணவு முறைகளை சாதாரணமாக ஒரு காலத்தில் நாம் ரசம் குழம்பு போன்றவற்றில் இந்த கருஞ்சீரகத்தை பெருங்காயம் போல் சிறிதளவு வாசனைக்காக வெகுவாக பயன்படுத்தி வந்தோம். அதை பயன்படுத்தி வந்தவரை நம்முடைய முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வந்தது இல்லை. அதன் அடிப்படையில் இந்த கருஞ்சீரகத்தை பகுப்பாய்வு செய்து அதன் எந்த வேதிப்பொருள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்பது ஆராய்ச்சி செய்யப்பட்டது. இறுதியாக தைமோக்குயினோன் தான் நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்று தெரிய வந்தது. அதன் பின்னர் அதே தைமோக்குயினோனை அவர்கள் சோதனைச் சாலை மூலமாக synthesis செய்து உருவாக்க பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் அதற்கான செலவு அதிகமாக வருவதால் இயற்கையிலிருந்து தயாரிக்கும் முறைக்கு மாறினார்கள். இந்த கருஞ்சீரகம் நமது இந்தியா போன்ற தட்பவெப்பநிலை உள்ள நாடுகளில் மட்டும் தான் தரமாக பயிர் செய்ய முடியும். அதனால் அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் பல ஆராய்ச்சி செய்தனர். அதுவரை நமது கருஞ்சீரகத்தில் இருந்துதான் இந்த வேதிப்பொருள் பிரிக்கப்பட்டது என்பதை அவர்கள் எந்த நிலையிலும் வெளிக்காட்டவில்லை.

அந்த ஆராய்ச்சிக்கு அவர்களுக்கு முடிவாக கிடைத்தது நமது புதினா குடும்பத்தைச் சார்ந்த Monarda fistulosa என்ற ஒரு காட்டுப் பூ செடியில் கிடைக்கும் என்பது தெரியவந்தது. அதிலிருந்து கிடைத்த தைமோக்குயினோனை அவர்கள் எலி போன்ற விலங்கினங்களுக்கு சோதனை செய்து வெற்றிகரமாக அதை நீரழிவு நோய்க்கான ஒரு மருந்தாக அறிமுகம் செய்தனர். அதன் பின்னர் தைமோக்குயினோனை வேறு எந்த தாவரத்திலிருந்து கிடைக்கும் என்பதை ஆராய்ச்சி செய்வது போல் செய்து நமது கருஞ்சீரகத்தில் இருந்து கிடைக்கும் என்பதை அவர்கள் முடிவு செய்து வெளியிட்டனர்.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/21675032

பின்னர் தைமோக்குயினோனை பல தாவரங்களில் இருந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அது எதையுமே அவர்கள் நேரடியான மனித மருத்துவப் பயன்பாட்டிற்கு எடுத்து வரவில்லை. இன்று வரை தரமான மனித பயன்பாட்டிற்கு நமது கருஞ்சீரகம் மற்றும் கருஞ்சீரக எண்ணெயில் இருந்து மட்டுமே தைமோக்குயினோன் தயார் செய்யப்படுகிறது.

இதை தயாரிக்கும் முக்கிய 10 நிறுவனங்களின் பட்டியல் : TCI, Sigma-Aldrich, Cayman, Toronto Research Chemicals, Sarchem Labs, LKT Laboratories, Clearsynth, Ark Pharm, Nanjing Zelang, JandK Scientific, Guangzhou Howei Chemical, etc… இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் கிடையாது. நமது பாரம்பரிய ஒரு மருந்தை அவர்கள் பணம் ஆக்குகிறார்கள். நாம் நம் கையில் இருக்கும் இயற்கையான கருஞ்சீரகம் என்ற பக்க விளைவு இல்லாத மருந்தை விட்டு விட்டு ஆங்கில மருத்துவர் பரிந்துரை செய்யும் தைமோக்குயினோனை நாம் மருந்தாக பயன்படுத்துகிறோம். இரண்டிற்கும் ஒரே வேறுபாடு நம் பாரம்பரிய மருந்து நிதானமாக வேலை செய்யும். ஆங்கில மருந்து இலவச இணைப்பாக பல பக்க விளைவுகளோடு வேகமாக வேலை செய்யும்.

இந்த ஆங்கில மருந்து எப்படி நமது இயற்கை மருந்துகள் இல்லாத பக்கவிளைவை உருவாக்குகிறது என்பது பற்றி அடுத்து நாம் பார்ப்போம்.

அதற்கு முன்பு சாதாரண மூலிகையாக நேரடியாக நாம் இந்த கருஞ்சீரகத்தை பயன்படுத்தினால் அதற்கு பக்கவிளைவுகள் உண்டா என்பதைப் பற்றி முதலில் பார்ப்போம்.

இந்த கருஞ்சீரகத்தை நாம் குறைந்த அளவில் அல்லது ஓரளவு நாம் பயன்படுத்தும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. இதை அதிகமாக பயன்படுத்தினால் விளைவுகள் உண்டாகும் என்பதற்கு உத்தரவாதமான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட எந்த ஒரு ஆய்வறிக்கையில் கிடையாது. ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் சில குறிப்புகள் ஆராய்ச்சி மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருஞ்சீரக எண்ணையை நாம் தோலின் மேல் தடவினால் வெகு சிலருக்கு ஒவ்வாமை மூலம் தோலில் அரிப்பு உண்டாகும்.

கர்ப்பிணிகள் இந்த கருஞ்சீரகத்தை ஓரளவு பயன்படுத்தும் வரை எந்த ஆபத்தும் இல்லை. அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் யோனி துவாரம் சிறுத்துப் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது பிரசவத்தின் போது பிரச்சனைகளை உருவாக்கலாம். அதற்கும் எந்த ஒரு உத்தரவாதமான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை கிடையாது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கருஞ்சீரகதால் எந்த பாதிப்பும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு வயதிற்கு மேல் வந்த குழந்தைகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் எண்ணையை வாய்வழியாக சில சொட்டுகள் தினமும் கூட கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அறிவியல்பூர்வமாக ஓரளவு உறுதி செய்யப்பட்ட ஒரு பிரச்சனை என்னவென்றால் ரத்தம் உறைவது இந்த கருஞ்சீரகம் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இரத்தம் உறையும் வேகம் குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு ரத்தம் எளிதில் உறைவது இல்லை. ஒரு வெட்டு காயம் போன்ற பிரச்சனைகளின் போது மற்றவர்களுக்கு ரத்தம் உறையும் நேரத்தை விட கருஞ்சீரகம் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதில் இதற்கு முன்பே வைட்டமின் K குறைபாடு உள்ள ஆளாக இருக்கும் பட்சத்தில் ரத்த உறைவு பிரச்சனை பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உண்டு.

இந்த கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதனால் குறைந்த சர்க்கரை அளவு வருமா என்றால் அதற்கான வாய்ப்புகள் இதுவரை எங்கேயும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் குறைந்த ரத்த அழுத்தம் எதுவும் இவர்களுக்கு வந்ததாக இல்லை.

இருப்பினும் ரத்த உறைவு பிரச்சனை இருப்பதால் இந்த கருஞ்சீரகத்தை அறுவை சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் ஒரு வாரம் முன்பே தவிர்ப்பது நல்லது.

இது தான் அதிகபட்சமாக கருஞ்சிரகத்தின் பக்கவிளைவாக அறிவியல் பூர்வமாக தரப்படும் எச்சரிக்கை இவைதான்.

https://www.rxlist.com/black_seed/supplements.htm

அலோபதி மருந்துக்கான பொதுவான முதல் பிரச்சனை என்னவென்றால் அதன் தயாரிப்பின் போது அதில் மீந்து நிற்கும் (Residual)  சில வெளியேற்றப்பட்ட வேதிப் பொருட்கள் தான். அந்தப் பின்விளைவு அந்த குறிப்பிட்ட மருந்தை தயாரிக்க பயன்படுத்தும் வேதிப்பொருளும் அதைத் தயாரிக்க அவர்கள் செய்யும் முறையும் பொருத்து வேறுபடும்.

அடுத்து நாம் தைமோக்குயினோன் மருந்துக்கு வருவோம்.

கருஞ்சீரகத்தை நான் நேரடியாக பயன்படுத்தும் போது என்னென்ன பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உண்டு என்று நாம் முன்னர் கூறினோமோ அது எல்லாமே தைமோக்குயினோன் வைத்து தான் கூறுகிறார்கள். அதாவது தைமோக்குயினோன் சிறிய அளவு பயன்படுத்தும் போது வரும் பின்விளைவுகளை கருஞ்சீரகத்தை நேரடியாக பயன்படுத்தும் போது வர வாய்ப்பு உண்டு என்று உறுதிப்படுத்தியது தான் மேலே குறிப்பிட்ட அனைத்தும். ஆனால் தைமோக்குயினோன் மருந்தில் உறுதி செய்யப்பட்ட அந்த பின்விளைவுகள் இரத்த உறைவு பிரச்னை தவிர எதுவுமே கருஞ்சீரகத்தை நேரடியாக பயன்படுத்தும் போது உறுதி செய்யப்பட்ட முடியவில்லை.

இவை தவிர வேறு பல குறைபாடுகளும் கூறப்படுகிறது.

ரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது அதை சிஸ்டாலிக் டயஸ்டாலிக் என்று சொல்வார்கள். அதில் தைமோக்குயினோன் மருந்தை பயன்படுத்தும்போது சிஸ்டாலிக்-இன் அளவு குறைந்து விடுகிறது.

தைமோக்குயினோன் அளவு தவறாக அதிகமாக பயன்படுத்தி விட்டால் சில சமயம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் சில குறைபாடுகள் உருவாக வாய்ப்புண்டு.

தைமோக்குயினோன் ரத்தத்தில் அணுக்கள் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கவும், இரத்த சிரத்தின் அடர்த்தியை மாற்றவும், ரத்தத்திலுள்ள யூரியாவின் அளவில் குறைபாடு உருவாக்கவும் முடியும். சில சமயங்களில் ஆர்த்தரைடீஸ் என்று சொல்லப்படும் எலும்பு இணைப்புகளில் வரும் வலியை உருவாக்கி விடும்.

மிக அதிக அளவில் தவறுதலாக தைமோக்குயினோன் மருந்தை உட்கொள்ளும் பட்சத்தில் பல பின் விளைவுகளை உருவாக்க முடியும். இதன் அதிகபட்ச பயன்பாட்டிற்கான பின்விளைவுகளை இன்னும் பல ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கின்றனர் அல்லது முறையாக வெளியாகவில்லை.

https://www.karger.com/Article/Fulltext/486829

தைமோக்குயினோன் மட்டுமே கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் மருந்து அல்ல. அதைத் தவிர இன்னும் பல பொருள்கள் பல்வேறு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நீரழிவு நோய்க்கு கருஞ்சீரகத்தில் உள்ள வேறு சில உட்பொருட்கள் உபமருந்தாக செயல்படுகிறது. அதில் பல மூலக்கூறுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.

By,
*P. A. KUTTALA RAJAN*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *